உங்கள் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடற்றொழில் செய்வதானால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் - இலங்கை மீனவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி 

11 Jan, 2025 | 06:06 PM
image

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் என யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதி மகேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் (11) யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தங்களுடைய மீனவர்கள் வாழ்வாதார நோக்கத்துக்காக எங்களுடைய கடல் எல்லைக்குள் வந்ததாகவும், அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஏறக்குறைய 30 வருடங்களாக இந்திய மீனவர்களை கைது செய்வதும் விடுவதும் தொடர்கதையாக காணப்படுகிறது.

அவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடலுக்கு வந்தால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக கடலுக்குச் செல்வதில்லை. நாங்களும் வாழ்வாதாரத்திற்காகத்தான் கடல் தொழிலுக்கு செல்கின்றோம். 

இந்திய இழுவைப் படகின் அட்டகாசத்தினால் எங்களால் எமது கடலில் தொழில் செய்ய முடியவில்லை. தமிழக முதலமைச்சரே எமது மக்களின் வாழ்வுரிமையை பற்றியும் சற்று நீங்கள் சிந்தியுங்கள். 

உங்களுடைய கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவர்களோ அல்லது சீன மீனவர்களோ வந்து மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை வாழ்வாதார அடிப்படையிலோ அல்லது மனிதாபிமான அடிப்படையிலோ நீங்கள் விடுதலை செய்வீர்களா? நிச்சயம் நீங்கள் அவர்களை கைது செய்வீர்கள். 

இன்றைக்கும் உங்கள் எல்லையில் நீங்கள் சண்டை செய்துகொண்டுதான் இருக்கின்றீர்கள். அதுபோல எங்களது எல்லைக்குள் நீங்கள் வரவேண்டாம்.

எங்களது வளங்களை சுரண்டிக்கொண்டு, வாழ்வாதாரம் மனிதாபிமானம் என்று பொய்களை கூறிக்கொண்டு எங்களது மக்களை நிர்க்கதியாக்குகிறீர்கள். 

எனவே, உங்களது கடற்படையினை வைத்து உங்களுடைய மீனவர்களை எல்லை தாண்ட விடாமல் கட்டுப்படுத்துங்கள். எங்களது வளங்களை நாங்கள் பாதுகாத்துக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம்...

2025-01-25 00:51:06
news-image

சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த...

2025-01-25 00:46:15
news-image

வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்...

2025-01-25 00:37:17
news-image

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக...

2025-01-25 00:12:34
news-image

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை வரவேற்று...

2025-01-24 23:59:55
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் :...

2025-01-24 13:22:43
news-image

கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல் ஆகஸ்டில்

2025-01-24 23:47:37
news-image

கண்டி - மஹியங்கனையில் பல வீதிகளை...

2025-01-24 23:44:47
news-image

மஹிந்தவுக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் அதற்கெதிராக முன்னிலையாவோம்...

2025-01-24 16:18:19
news-image

உத்தியோகபூர்வமாக அறிவித்த மறுகணமே மஹிந்த ராஜபக்ஷ...

2025-01-24 17:20:51
news-image

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள...

2025-01-24 16:14:14
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17