(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு எதிராக ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 140 ஓட்டங்களால் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டியது.
ஆனால் 3 போட்டிகள் கொண்ட தொரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து தனதாக்கிக்கொண்டது.
உபாதைக்கு மத்தியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகியோர் குவித்த வேகமான அரைச் சதங்களும் அசித் பெர்னாண்டோ, ஏஷான் மாலிங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோரின் 3 விக்கெட் குவியல்களும் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைக் குவித்தது.
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் திறிமையாகத் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்களில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்திருந்த பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளாகி நொண்டியிவாறு ஓய்வறைக்கு தற்காலிகமாக திரும்பினார்.
மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ (17) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
குசல் மெண்டிஸ் 48 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 54 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித் தலைவர் சரித் அசலன்க இந்தத் தொடரில் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக பிரகாசிக்கத் தவறினார்.
அவரைத் தொர்ந்து கமிந்து மெண்டிஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆடுகளம் நுழைந்த பெத்தும் நிஸ்ஸன்க, தனது எண்ணிக்கைக்கு மேலும் 16 ஓட்டங்கள் சேர்ந்த நிலையில் 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஜனித் லியனகேயும் சமிது விக்ரமசிங்கவும் ஜோடி சேர்ந்து 6ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சமிது விக்ரமசிங்க 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடனும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 53 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
மஹீஷ் தீக்ஷன 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மெட் ஹென்றி 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.
ட்ரென்ட் போல்டுக்கு அடுத்ததாக குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களைப் பூர்த்திசெய்த நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை மெட் ஹென்றி பெற்றுக்கொண்டார்.
ட்ரென்ட் போல்ட் 81 இன்னிங்ஸ்களிலும் மெட் ஹென்றி 83 இன்னிங்ஸ்களிலும் 150 விக்கெட்களைப் பூர்த்திசெய்தனர்.
மெட் ஹென்றியை விட மிச்செல் சென்ட்னர் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
291 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 29.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.
முன்வரிசையில் மார்க் செப்மன் மாத்திரம் 81 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 81 ஓட்டங்களைக் குவித்தார்.
மத்திய மற்றும் பின்வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 13 ஓட்டங்களையும் நேதன் ஸ்மித் 17 ஓட்டங்களையும் மெட் ஹென்றி 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: அசித்த பெர்னாண்டோ, தொடர்நாயகன்: மெட் ஹென்றி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM