வேகத்தை கணிக்கும் கருவிகள் இலங்கை பொலிஸாருக்கு வழங்கி வைப்பு !

Published By: Digital Desk 2

11 Jan, 2025 | 10:37 PM
image

அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வேகத்தை கணிக்கும் 30 SPEED GUN கருவிகளை   இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) நடைபெற்றது. 

இந் நிகழ்வு, பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்படி, இதன் முதற்கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய பிரிவுகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கும், மேல்மாகாண போக்குவரத்து தெற்குப் பிரிவுப் பணிப்பாளர்களுக்கும் இந்த  SPEED GUN கருவிகள் வழங்கப்பட்டன.

மேலும், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் வாகனப் பிரிவுகளுக்கு இவை வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த SPEED GUN கருவியை கையாளுவதற்கு எதிர்காலத்தில் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பயிற்சிகளை பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த SPEED GUN கருவி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்பத்துடன் இயக்கப்படுகின்றன மற்றும் சிறப்பு இரவு போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 24589 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, அதில் 2242 கார் விபத்துக்களாகும்.  மேலும்  இந்த விபத்துகளால் 2253 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அதிவேகமாக வாகனம் ஓட்டும் 31182 பேருக்கான சட்டத்தை பொலிஸார் அமுல்படுத்தியுள்ளதோடு அதிவேகத்தினால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை 731 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, விபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த  SPEED GUN கருவிகள் இலங்கை பொலிஸாருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11