தமிழ்த் தேசியக்கட்சிகளின் 25 ஆம் திகதி சந்திப்பில் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி பங்கேற்பதாக அறிவிப்பு

Published By: Digital Desk 7

11 Jan, 2025 | 10:43 PM
image

(நா.தனுஜா)

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 தமிழ்த்தேசியக்கட்சிகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சந்திப்பில் தமது கட்சி பங்கேற்று முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி தெரிவித்துள்ளது.

அதேவேளை இவ்வாரம் நடைபெறவுள்ள தமது கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திலேயே இச்சந்திப்பில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும்  முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர்  சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத்தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இச்சந்திப்புக்கான நிகழ்ச்சிநிரல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வினவியபோது, எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சந்திப்புக்கான நிகழ்ச்சிநிரல் எதனையும் தாம் தீர்மானிக்கவில்லை எனவும், அன்றைய தினம் சகல தரப்பினரும் சந்தித்துப்பேசி, அதன்பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்போம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவிருக்கும் உறுப்பினர்கள் யார் என அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்திடம் வினவியபோது, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அக்கூட்டத்திலேயே இதுபற்றித் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் தமிழத்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியத்தைக் காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அதன்படி புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும், அதனை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி கலந்துகொள்ளும் எனவும், அதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் யார் என்பது பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் சித்தார்த்தன் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28