மத்திய அரசின் கையில் சிக்கி தமிழகஅரசு தவித்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது,‘ தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. மத்திய அரசு தமிழக அரசை தனது கைக்குள் வைத்திருக்கிறது. மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை அடிக்கடி சந்திப்பதும், அவருக்கு அஞ்சி செயல்படுவதும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. இப்படி மத்திய அரசு தமிழக அரசில் தலையிடுவது ஜனநாயக விரோதமாகும்.’ என்று தெரிவித்தார்.