ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்கள் நேற்று (10) திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (11) அப்பாடசாலைக்குச் சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளில் கல்வி பயிலும் 50 மாணவர்களே சுகயீனமுற்றுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு நேற்று மாலை முதல் தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
சுகயீனமுற்ற 50 மாணவர்களில் 25 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலும் ஏனைய 25 மாணவர்கள் ஹட்டன் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த மாணவர்களில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் 3 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வர, ஏனையவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை பாடசாலையில் மாணவர்களுக்கான காலை உணவாக சோறு, போஞ்சி, பருப்பு மற்றும் கீரை ஆகியன வழங்கப்பட்டதாகவும், எனினும், அந்த உணவை உண்ணாத மாணவர்களும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும், பாடசாலையில் உள்ள குடிநீரினால் மாணவர்கள் சுகயீனமுற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பாடசாலைக்கு கள விஜயம் செய்து, குடிநீர் மாதிரிகளை சேகரித்து, அவற்றை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM