2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் 118,240 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு, அவ்விபத்துக்களில் சிக்கி 12,140 உயிரிழந்துள்ளனர். வருடாந்தம் வீதி விபத்துக்களால் உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக கராபிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியத்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் யூ.சி.பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற 23,704 விபத்துக்களில் 2,363 பேர் உயிரிழந்தனர்.
2021ஆம் ஆண்டில் இடம்பெற்ற 22,847 விபத்துக்களில் 2,557 பேர் உயிரிழந்தனர்.
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற 21,953 விபத்துக்களில் 2,540 பேர் உயிரிழந்தனர்.
2023ஆம் ஆண்டு இடம்பெற்ற 24,877 வீதி விபத்துக்களில் 2,321 பேர் உயிரிழந்தனர்.
2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 24,859 வீதி விபத்துக்களில் 2,359 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு வகையான வீதி பாதுகாப்புத் திட்டங்கள் இருந்தபோதிலும் வீதி விபத்துகள் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
மேலும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள விபத்துகளின் விகிதத்தை 50 வீதம் குறைக்கும் இலக்குடன் ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. இருப்பினும், விபத்துகள் 100 வீதம் அதிகரித்துள்ளது.
சனத்தொகை மற்றும் நிலப்பரப்பின் விகிதத்தின் அடிப்படையில், தெற்காசியாவில் விபத்துக்கள் இடம்பெறும் வீதம் அதிகரித்துக் காணப்படும் நாடாக இலங்கை விளங்குகிறது.
நாட்டைப் பாதிக்கும் இந்தப் பாரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்படவேண்டியது மிகவும் அவசியமானது. இல்லையெனில், அது கடுமையான சமூக நெருக்கடியைத் தூண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM