சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம்

11 Jan, 2025 | 10:18 AM
image

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது. 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் வட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உளவள ஆலோசனை துறை இணைப்பாளர் எம்.எம்.ஜீ.வி.ரஸாத் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

போதைப்பொருள் பாவனைக்கு சமூகத்தில் அடிமையாகின்றவர்களின் மூலம் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகவும் இதனை ஒழித்து கட்டுவதில் மிகப்பெரிய பங்கு சுகாதாரத் துறையில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தர்கள் கொண்டுள்ளனர் எனவும் இதன்போது வளவாளர் தெரிவித்தார்.    

வீடுகளில் உள்ள தாய்மார்கள் மற்றும் பாதிக்கப்படுகின்ற பெண்களிடம் மிகவும் நெருக்கமான உறவை கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு தரப்பு சுகாதாரத் துறையில் உள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். 

மேலும் இந்த நிகழ்வில் இணைப்பாளர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களான ரீ.எல். றிஸ்வானா, எஸ்.எப். றியானா, எஸ். விஜயலதா ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18