சிகரெட், மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

Published By: Digital Desk 3

11 Jan, 2025 | 04:44 PM
image

(எம்.மனோசித்திரா)

சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அந்த வகையில் இன்று சனிக்கிழமை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்நிறுவனம் நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலைகள்  5  மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, கப்ஸ்டன் மற்றும் ஜோன் பிளேயர் சிகரெட்டுகளின் விலை  5 ரூபாவாலும் மற்றும் டன்ஹில் மற்றும் கோல்ட் லீவ் சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேஷ சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 7,244 ரூபாவாகும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு, மொலேசஸ், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயத்திற்கு விதிக்கப்படும் வரி 7,752 ரூபாவாகும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 7,969 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் நேற்று முதல் திருத்தப்பட்டுள்ளன. இப்புதிய வரித் திருத்தங்களால், 3,580 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் அதி விசேஷ சாராயத்தின் விலை 102ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,850 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் தென்னஞ் சாராயத்தின் விலை 109ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4,000ரூபாவாக இருந்த பழைய சாராய போத்தல் ஒன்றில் விலை  109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 4,250 ரூபாவாக இருந்த அதிவிசேஷ பழைய சாராய போத்தல் ஒன்றில் விலையும் 109ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், செறிவு குறைந்த பீர் போத்தல் ஒன்றின் விலை 30ரூபாவாலும், செறிவு கூடிய பீர் போத்தல் ஒன்றின் விலை 40ரூபாவாலும் அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு விஸ்கி போத்தல் ஒன்றின் விலையும் 100ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அவற்றின் செறிவின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம்...

2025-01-25 00:51:06
news-image

சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த...

2025-01-25 00:46:15
news-image

வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்...

2025-01-25 00:37:17
news-image

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக...

2025-01-25 00:12:34
news-image

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை வரவேற்று...

2025-01-24 23:59:55
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் :...

2025-01-24 13:22:43
news-image

கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல் ஆகஸ்டில்

2025-01-24 23:47:37
news-image

கண்டி - மஹியங்கனையில் பல வீதிகளை...

2025-01-24 23:44:47
news-image

மஹிந்தவுக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் அதற்கெதிராக முன்னிலையாவோம்...

2025-01-24 16:18:19
news-image

உத்தியோகபூர்வமாக அறிவித்த மறுகணமே மஹிந்த ராஜபக்ஷ...

2025-01-24 17:20:51
news-image

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள...

2025-01-24 16:14:14
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17