ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராஜதந்திரியான உதயங்க வீரதுங்க அவரது அயலவர் ஒருவரைத் தாக்கியமைக்காக வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
தலபத்பிட்டியவில் அயல் வீட்டில் வசிக்கும் 66 வயதுடைய நபர் ஒருவருடன் வியாழக்கிழமை (9) ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, முன்னாள் இராஜதந்திரி உதயங்க வீரதுங்க அவரைத் தாக்கியுள்ளார். அதனையடுத்துக் காயமடைந்த அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட உதயங்க வீரதுங்க, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM