(நெவில் அன்தனி)
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (11) இலங்கை நேரப்படி சனிக்கிழமை (11) காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிறது. நியூஸிலாந்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி பகல் - இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்திலும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 0 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்த இலங்கை கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டுவதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
அதேவேளை, தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்கு நியூஸிலாந்து முயற்சிக்கவுள்ளது.
முதல் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டமே இலங்கையின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது.
முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் மோசமான தோல்வியைத் தழுவிய இலங்கை, மழையினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது போட்டியில் 113 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. அத்துடன் தொடரையும் இலங்கை பறிகொடுத்தது.
இரண்டாவது போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அணித் தலைவர் சரித் அசலன்க, 'நியூஸிலாந்துக்கு எதிராக கடைசிப் போட்டியில் (இன்று நடைபெறவுள்ள போட்டி) எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது' என்றார்.
பவர் ப்ளேயில் மோசமான துடுப்பாட்டமே எமது தோல்விக்குக் காரணமாக இருந்தது எனக் குறிப்பிட்ட அவர், 'சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிப்பதற்கு நாங்கள் சரியான வழிமுறைகளை பிரயோகிக்க முயற்சித்து வருகிறோம். மேகமூட்டமான சூழ்நிலையில் நாங்கள் இதனைவிட சிறப்பாக விளையாடியிருக்கவேண்டும். பவர் ப்ளேயில் சில விக்கெட்களை வீழ்த்தியிருக்கவேண்டும். ஆனால், இந்த இரண்டு விடயங்களிலும் நாங்கள் திறமையாக செயல்படத் தவறிவிட்டோம். தோல்வியிலிதுந்து மீண்டெழுந்து எதிர்நீச்சல் போடுவது முக்கியமாகும்' என்றார்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவும் இரண்டாவது போட்டியில் கமிந்து மெண்டிஸும் அரைச் சதங்கள் பெற்ற துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
ஆனால், பெத்தும் நிஸ்ஸன்க உட்பட ஏனைய முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.
மத்திய வரிசையில் ஜனித் லியனகே, சமிது விக்கரமசிங்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
மஹீஷ் தீக்ஷன 2ஆவது போட்டியில் ஹெட் - ட்ரிக்கை பதிவுசெய்தபோதிலும் கடைசியில் அது வீண்போனது.
இன்றைய போட்டியிலாவது சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசிப் போட்டியில் சகலதுறைகளிலும் மிகத் திறமையாக விளையாடி இலங்கை அணியினர் ஆறுதல் வெற்றியை ஈட்ட முயற்சிக்கவுள்ளனர்.
ஆனால், அது இலகுவாக அமையும் என எதிர்பார்க்கமுடியாது.
இந்தத் தொடரில் முழுமையான வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாக நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் தெரிவித்துள்ளார்.
அணிகள் (பெரும்பாலும்)
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சமிது விக்ரமசிங்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார அல்லது துனித் வெல்லாலகே அல்லது ஏஷான் மாலிங்க.
நியூஸிலாந்து: வில் யங், ரச்சின் ரவிந்த்ரா, மார்க் செப்மன், டெரில் மிச்செல், டொம் லெதம், க்ளென் பிலிப்ஸ், மிச்செல் சென்ட்னர், நேதன் ஸ்மித், மெட் ஹென்றி, ஜேக்கப் டஃபிஇ வில் ஓ'ப்றூக்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM