ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

10 Jan, 2025 | 07:04 PM
image

இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் ,தயாரிப்பாளர் , என பன்முக ஆளுமை கொண்ட ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக , மீனவ இளைஞனாக , முதன்மையான  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம்பெருமாள், அண்டனி, சேத்தன், இளங்கோ குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் சாகசமும் , மர்மமும் கலந்த பொழுதுபோக்கு படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து  பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் தோற்ற பார்வை மற்றும் கிளர்வோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. 

இதில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரான இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' திரைப்படம் அவருடைய திரையுலக பயணத்தில் 25 வது படம் என்பதும், இதனை அவரும் இணைந்து தயாரித்திருக்கிறார் என்பதும், இதன் மூலம் அவரும் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பதும்,  இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களை போல ஜீ. வி. பிரகாஷ் குமாரும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்