பொங்கல் திருநாளன்று வெளியாகும் நடிகர் கிஷன் தாஸ் நடித்த 'தருணம்' திரைப்படம் , ரொமான்ஸ் பாதி திரில்லர் பாதி என தயாராகி இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
' தேஜாவு ' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்' தருணம் '. இதில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் , ராஜ் ஐயப்பா, பால சரவணன் , விமல் ராஜா, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ஈடன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் வெளியீட்டிற்கு முன் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது திரைப்பட விநியோகஸ்தரும் , தயாரிப்பாளருமான தனஞ்செயன் மற்றும் டி. சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகன் கிஷன் தாஸ் பேசுகையில், '' தேஜாவு என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்தவுடன் அதேபோன்றதொரு திரில்லர் கதையை சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் விவரித்த கதையில் ரொமான்ஸ் பாதி த்ரில்லர் பாதியாக இருந்தது.
ஆனால் இதுவும் சுவாரசியமாக இருந்தது. கதையைக் கேட்டவுடன் இயக்குநரிடம் இந்த கதையை எம்மால் சுமக்க முடியுமா? திரையில் வெற்றி பெற வைத்திட முடியுமா? என தயக்கத்துடன் கேட்டேன். அதற்கு நம்பிக்கையுடன் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து இந்த படத்தில் சிறப்பு காவல் படை வீரராக நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாத தருணங்கள் தான். படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். பொங்கல் திருநாளில் வெளியாகும் ஏனைய திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவதை போல் எங்கள் திரைப்படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM