அதர்வா முரளி நடிக்கும் ' டி என் ஏ' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

10 Jan, 2025 | 05:27 PM
image

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' டி என் ஏ ' படத்தின் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ' டி என் ஏ' எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் , பாலாஜி சக்திவேல் , ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன் , ரித்விகா,  சுப்பிரமணியம் சிவா , கருணாகரன் , 'பசங்க' சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்யபிரகாஷ் , அனல் ஆகாஷ்,  பிரவீன் சைவி,  சஹி சிவா,  ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது இதில் எக்சன் காட்சிகளும் செண்டிமெண்ட் காட்சிகளும் காவல்துறையின் புலன் விசாரணை காட்சிகளும் காதல் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்