மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற இவ்வாண்டுக்கான இந்திய சர்வதேச நகை கண்காட்சியில் இலங்கை நகை வியாபாரிகள் அமைப்பின் தலைவர் ரத்னராஜா சரவணன் தலைமையில் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாண்டுக்கான இந்திய சர்வதேச நகை கண்காட்சி கடந்த 4 - 7 ஆம் திகதி வரை மும்பையின் ஜியோ வேல்ட் கொன்வென்ஷன் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் கலந்துகொண்ட இலங்கை நகை வியாபாரிகள் அமைப்பின் பிரதிநிதிகள், 1966 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் இரத்தின மற்றும் நகை ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும் இந்திய இரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுப் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.
இச்சந்திப்பின்போது இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்ட சில யோசனைகள் இந்திய இரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுப் பேரவையினால் முன்மொழியப்பட்டன.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சியில் இலங்கையின் முன்னணி இரத்தின ஏற்றுமதியாளர்களை உள்வாங்குதல், இலங்கையின் உயர் தரத்திலான இரத்தின வகைகளை உலகளாவிய ரீதியில் காட்சிப்படுத்துவதற்கு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துதல் ஆகிய யோசனைகள் அப்பேரவையின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடாத்தப்படும் இந்திய சர்வதேச நகை கண்காட்சியில் இலங்கைக்கென ஒரு காட்சிக்கூடத்தை ஒதுக்குவதற்கும் அவர்களால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM