(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு,  கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சீன கோடீஸ்வரி ஒருவரின்  சுமார் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய மாணிக்கக் கற்கள் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா பணம் ஆகியவற்றை திருடிய பொலிஸ் சார்ஜன் ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் திருட்டுக்கு உதவிய குற்றச் சாட்டின் கீழ் குறித்த சந்தேக நபரின் காதலியான பல்கலைக்கழக மாணவி ஒருவரும் அவரின் நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது  செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரது நண்பரும் குறித்த ஹோட்டலில் வீட்டு பராமரிப்பாளர்களாக இருந்தவர்கள் எனவும் சீன கோடீஸ்வரி ஹோட்டலில் இருந்த நேரமே அவரது பாதுகாப்பு பெட்டக இரகசிய இலக்கத்தை தெரிந்துகொன்டு இந்த திருட்டை சந்தேக நபர்கள் செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.