விருந்தோம்பல் துறையில் மிளிரும் திறமை - CINNAMON HOTELS & RESORTS இல் நத்தாலியின் வெற்றிப் பயணம்

10 Jan, 2025 | 04:24 PM
image

ஆண்களுக்கே கூடுதல் சாதகம் கொண்டது என பெரும்பாலானோரின் அபிப்பிராயத்தைக் கொண்ட துறையொன்றில் பெண்கள் மிளிர்வதற்கு என்ன செய்ய வேண்டும், “தன்னம்பிக்கை, நெகிழ்திறன் மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்,” என்பவையே என கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலின் விருந்தினர் சேவைப் பிரிவின் முகாமையாளர் நத்தாலி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

முகாமைத்துவப் பயிலுனராக இணைந்து, தற்போது Cinnamon Hotels & Resorts சங்கிலியின் நகரத்திலுள்ள முன்னணி ஹோட்டல்களில் ஒன்றில் முகாமையாளராக வளர்ச்சி கண்டுள்ள நத்தாலி அவர்களின் பயணம், சினமன் ஹோட்டல்கள் குழுமத்தில் தமது பணி நிலைகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது மாத்திரமன்றி, இத்துறையில் விருந்தோம்பலுக்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதில் குறிப்பிடத்தக்க பல பெண்களின் வெற்றிச் சரித்திரங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.        

பேரார்வத்தை முன்னெடுத்து, விருந்தோம்பல் துறையில் உலகில் காலடியெடுத்து வைத்த தருணம்

விருந்தோம்பல் துறை மீதான நத்தாலியின் அபிமானம் இள வயதிலேயே தொடங்கியது. தனது தந்தையின் தொழில் செல்வாக்கு மற்றும் வழக்கமான 9-5 பணிக்குள் முடங்கி விடுவதில் கொண்டிருந்த தயக்கம் ஆகியவற்றுடன், உலகினை ஆராய்ந்து, அனுபவித்து, புதியவர்களைச் சந்திக்கும் ஆவலால் கவரப்பட்டே அவர் வளர்ந்தார்.

விருந்தோம்பல் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்ட கால கனவை அவர் சுமந்தாலும், தொழில்ரீதியாக ஆரம்பத்தில் நிதித் துறையில் ஈடுபட்ட அவர், நடைமுறைச் சாத்தியமான தெரிவு அதுவே என நம்பினார்.

நிதித்துறையில் பாதுகாப்பான தொழிலைக் கொண்டிருந்தமைக்கு மத்தியிலும், ஏதோவொன்றை தவற விட்டுள்ளேன் என்ற உணர்வு எப்போதும் அவரை ஆட்டிப்படைத்தது.

சமூக ஊடகத்தில் அவர் ஆழ்ந்திருந்த தினமொன்றில், முகாமைத்துவப் பயிலுனராக இணைந்து வரவேற்பு அலுவலகத்திற்கு தலைமை தாங்கும் அளவுக்கு வளர்ச்சி கண்ட கயனி புஞ்சிஹேவயின் பயணம் குறித்து Cinnamon Hotels & Resorts முகநூல் பக்கத்தினூடாக அறிந்து கொண்டார்.

நத்தாலியின் எதிர்பார்ப்புக்கு கயனி அவர்கள் வெற்றிப்பயணம் குறித்த ஆக்கம் தீப்பொறியைத் தூண்டி விட்டதுடன், அவருடைய தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திய தருணத்திற்கான உந்துசக்தியாகவும் அமையப்பெற்றது.

விருந்தோம்பல் துறைக்கு தான் செல்ல விரும்பும் எண்ணத்தை அவர் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்த சமயத்தில், இத்தொழில்துறையில் பெண்கள் குறித்த சமூகத்தின் கண்ணோட்டங்களையிட்டு பெற்றோர் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தத் தவறவில்லை.

எனினும் அவரது மூத்த சகோதரி அவருக்கு உறுதுணையாக நின்று நத்தாலியின் தீர்மானத்திற்கு ஓயாத ஆதரவை வழங்கினார். “அவர் எனக்கு உதவிக்கும் மேலாக உறுதுணையாக நின்றார். நான் பேரார்வம் கொண்ட துறையில் செல்வதற்கு எனக்கு இடமளிக்க வேண்டும் என எனது பெற்றோரை இசைய வைத்தார்.”

தனது குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன், Cinnamon Hotels & Resorts இன் அடுத்த ‘Cinnamon Lead’ - முகாமைத்துவப் பயிலுனர் நிகழ்ச்சித்திட்டம் எப்போது ஆரம்பிக்குமென நத்தாலி  காத்திருந்தார். வாய்ப்பு கிட்டிய போது, எவ்விதமான தயக்கங்களுமின்றி அவர் அதற்கு விண்ணப்பித்தார்.

ஸ்திரமான ஒரு தொழிலை விட்டு விலகி, விருந்தோம்பல் துறையில் சவால்மிக்க தொழிலுக்கு செல்லும் அவரது தீர்மானம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்த போதிலும், அவர் தனது தீர்மானத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். “எனது திறமைகள் குறித்த தன்னம்பிக்கையுடனும், எதை எதிர்பார்க்க வேண்டும் என்ற தெளிவுடனும் நான் நேர்காணலுக்குச் சென்றேன்,” எனக் குறிப்பிட்ட அவர், மேற்குறிப்பிட்ட பயிலுனர் நிகழ்ச்சித்திட்டத்தில் தனது இடத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.        

பழமைவாதங்களைத் தகர்த்து, மதிப்புக்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் தலைமைத்துவத்தைப் போற்றிக் கொண்டாடுதல் 

தனது 18 மாத கால பயிற்சியின் போது தான் எதிர்கொண்ட அனைத்து சவால்களுக்கும், திடசங்கல்பத்துடன் முகங்கொடுத்த நத்தாலி , தலைமைத்துவம், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மற்றும் தீர்மானத்தை மேற்கொள்ளும் திறன்கள் ஆகியவற்றுடன், தொழில்துறையின் பல்வகைப்பட்ட அம்சங்கள் குறித்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டார்.

“முன்னனுபவம் ஏதுமின்றி விருந்தோம்பல் துறையில் காலடியெடுத்து வைப்பது மிகவும் சவாலாக அமையக்கூடும், எனினும் ஒவ்வொரு சவாலும் புது அனுபவத்தைக் கற்றுத்தரும் என்ற வகையில் மதிப்பு மிக்கது.” அவர் தற்போது விருந்தினர் சேவைப் பிரிவின் முகாமையாளராகப் பணியாற்றி வரும் கொழும்பு சினமன் லேக்சைட் உட்பட, இலங்கையிலும், மாலைதீவிலும் உள்ள இக்குழுமத்தின் ஐந்து வெவ்வேறு ஹோட்டல்களில் அவர் பணிகளை ஆற்றியுள்ளார்.    

கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, தனது வெற்றிக்கு, வழிகாட்டுதல் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை நத்தாலி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பயிலுனர் நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே, கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலின் முன்னாள் கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் முகாமையாளர் மாலக மிஹிர, நிறுவனத்தில் இணைவதற்கு நத்தாலிக்கு ஊக்கமளித்த மற்றுமொரு வெற்றிப் பயணத்தின் உதாரணமான வரவேற்பு அலுவலக முகாமையாளர் கயனி புஞ்சிஹேவ அடங்கலாக, சினமன் நிறுவனத்தில் முக்கிய வழிகாட்டிகளுடன் அவர் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தி அறிவையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டார்.

“ஒரு பெண்ணாகவோ அல்லது பணிக்கு புதியவராகவோ நடத்தப்படுகின்றேன் என்ற உணர்வு எனக்குள் அரிதாகவே காணப்பட்டது. விருந்தோம்பல் துறையில் பெண்கள் முகங்கொடுக்கின்ற தனித்துவமான சவால்களைப் புரிந்துகொள்கின்ற வழிகாட்டியொருவரைக் கொண்டிருப்பது உண்மையில் பாரிய வேறுபாட்டைத் தருகின்றது. ஏனெனில், கடினமான காலகட்டங்களில் ஆதரவையும், ஆழ்ந்த அறிவையும் மற்றும் ஊக்கத்தையும் அவர் நமக்கு அளிக்கிறார்.”      

தலைமைத்துப் பதவி வகிக்கின்ற ஒரு இளம் பெண் என்ற ரீதியில், தன்னம்பிக்கை மற்றும் தொடர்ச்சியாக கற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தின் மீது நத்தாலி நம்பிக்கை கொண்டுள்ளார். “தன்னம்பிக்கை என்பது அத்தியாவசியமானது, சவால்களுக்கு நேரடியாக முகங்கொடுத்து, உறுதியான தீர்மானங்களை எடுப்பதற்கு அது உங்களுக்கு உதவுகின்றது,” என்பதே அவரது ஆலோசனை.

“விருந்தோம்பல் துறையைப் பொறுத்தவரையில், காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றி, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிந்தனை தேவைப்படுவதால், தொடர்ச்சியாக கற்றுக்கொள்வதற்கு முன்னுரியமையளிப்பது மிகவும் முக்கியமானது.”     

தனது தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு  John Keells Speechcraft மற்றும் விவாதப் போட்டிகள் போன்ற உள்வாரி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அவர் நன்றிகளை வெளிப்படுத்தியதுடன், விருந்தினர் சேவைகள் குறித்த தனது பணிகளை முன்னெடுப்பதற்கு அவை மகத்தான வழியில் உதவியுள்ளன.

“வலுவான ஆண் போட்டியாளர்களுக்கு முகங்கொடுத்தமையே எனது திடசங்கல்பத்திற்கு உந்துசக்தியளித்துள்ளது,” என்று கூறிய அவர், தனது சிந்தனைகளை வெளிப்படுத்தி, மக்களுடன் திறன்மிக்க வழியில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு இந்த அனுபவங்கள் எந்தளவு தூரம் தனது தன்னம்பிக்கையை மேம்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.      

விருந்தோம்பல் துறையில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பாரிய வாய்ப்புக்கள்

விருந்தோம்பல் துறையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புக்கள் போதியளவு கிடையாது என்ற பொதுவான அபிப்பிராயத்திற்கு சவால் விடுக்கும் வகையில் தலைமைத்துவத்தை நோக்கிய நத்தாலியின் பயணம் அமைந்துள்ளது. பல்வேறு பணிப்பிரிவுகளில் அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், இத்தொழிற்துறை, அதன் சவால்கள் மற்றும் வெற்றிகள் தொடர்பான பரந்த புரிந்துணர்வை அவருக்கு வழங்கியுள்ளதுடன், தனது பணியாளர்களை நிர்வகித்து, அறிவுபூர்வமான தீர்மானங்களை திறன்மிக்க வகையில் மேற்கொள்வதற்கு அவருக்கு வலுவூட்டியுள்ளன.      

நிறுவனத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் கலாச்சாரம் மற்றும் ஆதரவளிக்கும் கட்டமைப்பு ஆகியவையே தனது பலத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டதுடன், தனது வெற்றியில் சினமன் தலைமைத்துவத்தின் வலிமை, நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். “ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் கற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந் நிறுவனத்தின் கலாச்சாரமானது மிகவும் வலிமைமிக்க இத்தொழில்துறையில் வெற்றிபெறுவதற்கும், எனது திடசங்கல்பத்திற்கு உந்துசக்தியளித்து, வாய்ப்புக்கள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும் எனக்கு வலுவூட்டியுள்ளது.”

எதிர்காலத்தை எடுத்துக் கொண்டால், இத்தொழில்துறையில் பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் குறித்து நத்தாலி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். “விருந்தோம்பல் தொழில்துறை பரிணாம வளர்ச்சி கண்டு வருவதுடன், பன்மைத்துவம் மற்றும் அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றின் மீதான கவனம் அதிகரித்துச் செல்கின்றமை, அனைத்து தடைகளையும் தகர்த்து, தொழில் வளர்ச்சி கண்டு, சிரேஷ்ட பணிப்பொறுப்புக்களை ஆற்றுவதற்கு பெண்களுக்கு பாரிய வாய்ப்புக்களை வழங்கும்.”

விருந்தோம்பல் தொழிலைக் கருத்தில் கொள்கின்ற ஆர்வம்மிக்க இளம் பெண்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனை, “நீங்கள் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்கு அடுத்தவர்களுக்கு இடமளிக்க வேண்டாம். நீங்கள் செய்கின்ற எதையும் அபிமானத்துடன் செய்தால், விருந்தோம்பல் துறை மிகுந்த நிறைவளிக்கும் தொழிலாக அமைய முடியும்.” சவால்களுக்கு முகங்கொடுத்து, வழிகாட்டலை நாடுமாறு அவர் இளம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதுடன், ஒருவர் தனக்கு எது சௌகரியமோ, அந்த வட்டத்திற்குள் மாத்திரம் நின்று விடாது அதற்கும் மேலாக முயற்சிகளை மேற்கொள்வதிலேயே பெரும்பாலும் வெற்றியும், வளர்ச்சியும் தங்கியுள்ளன.    

விருந்தோம்பல் தொழில்துறை மாற்றம் கண்டு வருவதையும், வளர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான வாய்ப்புக்கள் நிறைந்துள்ளதையும் நத்தாலி அவர்களின் பயணம் நமக்கு வலிமையுடன் எடுத்துரைக்கின்றது.

தனது பணியாளர்கள் மத்தியில் மதிப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற தலைமைத்துவத்திற்கு அங்கீகாரமளித்து, வளர்ப்பதில் Cinnamon Hotels & Resorts எப்போதும் முன்னின்று செயற்பட்டு வந்துள்ளது. முகாமைத்துவ பயிலுனர் நிகழ்ச்சித்திட்டங்கள், பணிப்பிரிவுகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற முயற்சிகளினூடாக ஊழியர்களுக்கு வலுவூட்டுகின்ற இந்நிறுவனத்தின் நெறிமுறைகள், பாரம்பரிய முட்டுக்கட்டைகளைத் தாண்டி, தமது முழுமையான ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கு நத்தாலி போன்ற பெண்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளன.   

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் ஆடை துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...

2025-01-22 18:11:55
news-image

இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஹெக்ஸாவேர்...

2025-01-23 22:17:56
news-image

சுப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கல்

2025-01-22 15:31:41
news-image

SDB தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக...

2025-01-22 15:30:55
news-image

' கொமர்ஷல் வங்கி 'ஆண்டின் பசுமை...

2025-01-22 15:10:50
news-image

12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024...

2025-01-22 15:43:00
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரண்டு...

2025-01-22 15:10:26
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-22 15:42:44
news-image

LOLC பைனான்ஸ் வழங்கும் முதல் பிரெய்லி...

2025-01-22 15:09:09
news-image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து...

2025-01-22 13:46:35
news-image

MMCA இலங்கை ‘முழு நில அமைப்பு’...

2025-01-15 11:09:05
news-image

இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு விமான...

2025-01-12 09:58:53