“எனது நண்பர் லசந்த விக்கிரமதுங்கவை நினைவுகூருகின்றேன்" - எரான் விக்கிரமரட்ண

Published By: Rajeeban

10 Jan, 2025 | 03:59 PM
image

16 வருடங்களிற்கு முன்னர் 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி லசந்த விக்கிரமதுங்க தாக்கப்பட்டு களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்ற தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.

அவ்வேளை நான் அரசியல்வாதியில்லை நான் ஒரு வங்கியாளன் லசந்த விக்கிரமதுங்கவின் நெருங்கிய நண்பன்.

அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் நான் லசந்தவிக்கிரமதுங்கவின் கல்லறைக்கு சென்று நீதியை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்பது குறித்து எனக்கு நினைவூட்டிக்கொள்கின்றேன்.

லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிநிகழ்வுகளில் காணப்பட்ட பதற்றம் இன்றும் எம்மில் சிலரை விட்டகலாமல் நீடிக்கின்றது.மேலும் லசந்தவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களிற்கும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை, இந்த விவகாரம் முடிவிற்கு வரவில்லை.

விமானப்படை விமான கொள்வனவில்  இடம்பெற்ற ஊழலை அவர் அம்பலப்படுத்தியமையே அவரது மரணத்திற்கு காரணம் என பெரிதும் நம்பப்பட்டது பின்னர் அதனை உறுதிசெய்யும் ஆதாரங்கள் வெளியாகியிருந்தன.

பாதுகாப்பு அமைச்சின் மிக்விமான கொள்வனவு குறித்து தான் கண்டுபிடித்த விடயங்கள் குறித்து  லசந்த 12ஆம் திகதி மவுண்டலவியா நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்கவிருந்தார்.அது அவ்வேளை அதிகாரத்திலிருந்தவர்களை அம்பலப்படுத்தியிருக்கும்.

எனினும் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னர் 2009 ஜனவரி 8 ம் திகதி அவர் கொலை செய்யப்பட்டார்.

எதிர்கட்சியிலிருந்தபோது எல்லாவேளையிலும் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக குரல்கொடுத்தவர்கள் தற்போது அரசாங்கத்தில் உள்ளனர்.

இந்த கொலைக்கு நீதியை வழங்கும் விதத்தில் விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் வேகமாக முன்னேறும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கின்றோம்.

ஜனவரி 8ம் திகதி சமீப காலத்தில் காணாமல்போன அல்லது கொலை செய்யப்பட்ட 34 ஊடகவியலாளர்களை நினைவூட்டுகின்றது.

இவர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிறுபான்மையினத்தவர்கள். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான  26 வருட உள்நாட்டு யுத்தத்தின் போது பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது அச்சுறுத்தப்பட்டனர்.

2010 ஜனவரி 24 ம் திகதி  ஆண்டு 50 வயது கருத்தோவியர் பிரகீத்எக்னலிகொட காணாமலாக்கப்பட்டார். அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலிற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் ,காணாமல்போன அவரை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா இன்னமும் தளர்ச்சியற்று நீதிக்காக போராடுகின்றார்.2008ம் ஆண்டு கீத்நொயர் நேசனின் இணை ஆசிரியர்  கடத்தி செல்லப்பட்டு மிக மோசமாக தாக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார். கீத்நோயரின் தலைவர் கிருசாந்த குரே நீதிக்காக பாடுபட்டார் அவர் வெளிப்படையாக பேசி அதிகார மட்டத்திலிருந்தவர்களிற்கு நெருக்கடியை கொடுத்தார்.

இன்னொரு விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்த முயன்றதால் அவர் நாட்டிலிருந்து வெளியேறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மைக்காக மௌனமாக்கப்பட்டார்:பத்திரிகையாளர் சுகிர்தராஜனிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

2025-01-24 20:40:09
news-image

அமைதியான தொற்றுநோயாக  மாணவர்களிடையே காணப்படும் மனநலச்...

2025-01-24 13:53:49
news-image

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று...

2025-01-24 13:31:38
news-image

விவசாய தொழில்முனைவு / வேளாண்மை நோக்கி...

2025-01-23 16:12:24
news-image

புதிய அரசியலமைப்பில் செனட் சபை? தவறுகளிலிருந்து...

2025-01-23 16:49:05
news-image

இலங்கையில் சமூக பணி

2025-01-23 11:56:18
news-image

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்...

2025-01-23 10:45:23
news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15