இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்தும் உலக பத்திரிகை புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை (10) காலை கொழும்பில் ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமானது.
இந்த கண்காட்சியை பிரதம அதிதியாக கலந்து கொண்ட வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி ஆரம்பித்து வைத்தார்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச், துணைத் தூதுவர் இவான் ரூட்ஜென்ஸ், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குமார் லோபஸ் மற்றும் உலக பத்திரிகை புகைப்படக் கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியை 20 ஆம் திகதி வரை (காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை) கட்டணமின்றி இலவசமாகப் பார்வையிடலாம். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபத்தில் இம்மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும், காலியில் மாநகர சபையில் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரையும் கண்காட்சியை பார்வையிடலாம்.
கொழும்பில் சினமன் லைப் ஹோட்டலில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM