(நெவில் அன்தனி)
மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது.
மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட், நேற்று நிறைவடைந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் இடம்பெற்ற அதே வீராங்கனைகளே 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான அணியிலும் இடம்பெறுகின்றனர்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மொறட்டுவை, பிறின்சஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரி வீராங்கனை மனுதி நாணயக்கார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை அனுரா கல்லூரி வீராங்கனை ரஷ்மிக்கா செவ்வந்தியிடம் அணியின் உதவித் தலைவி பொறுப்பு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், வரவேற்பு நாடான மலேசியா ஆகியவற்றுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் மலேசியாவை 19ஆம் திகதியும் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 21ஆம் திகதியும் கடைசிப் போட்டியில் இந்தியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடும்.
ஏ குழுவுக்கான இப் போட்டிகள் யாவும் கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
19 வயதின் கீழ் இலங்கை மகளிர் குழாம்
மனுதி நாணயக்கார (தலைவி - மொறட்டுவை பிறின்சஸ் ஒவ் வேல்ஸ்), ரஷ்மிக்கா செவ்வந்தி (உப தலைவி - மாத்தறை, அனுரா கல்லூரி), விமோக்ஷா பாலசூரிய (திருகோணமலை சிங்கள ம.வி.), ஹிருணி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, சஞ்சனா காவிந்தி, ஷெஹாரா இந்துவரி (அறுவரும் ரத்கமை, தேவபத்திராஜ கல்லூரி), தஹாமி சனுத்மா (நுகேகொடை, அநுலா வித்தியாலயம்), அஷேனி தலகுனே (கண்டி, மஹமாயா மகளிர் கல்லூரி), ப்ரமுதி மெத்சரா (அம்பாறை உஹன மத்திய கல்லூரி), சமோதி ப்ரபோதா (மொணராகலை. பஞ்ஞானந்த மகா வித்தியாலயம்), தனுலி தென்னக்கூன் (குருநாகல், மாலியதேவ மகளிர் கல்லூரி), லிமன்சா திலக்கரட்ன (அவுஸ்திரேலியாவில் பயின்றவர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM