(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் க்ளீன் ஸ்ரீ லங்கா கருத்திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தை பாடசாலை கல்வி கட்டமைப்பில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். படித்தவர்கள் ஏனைய தரப்பினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் . ஊழலுக்கு எதிராக செயற்படுவதாயின் முதலில் விளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள். ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரிசி மாபியாக்களை முடிவுக்கு கொண்டு வராமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசாங்கம் செய்வதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு 45 இலட்சம் மெற்றிக்தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 இலட்சம் மெற்றிக்தொன் நெல்லை கொள்னவவு செய்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
42 இலட்சம் மெற்றிக் தொக் நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் கொள்வனவு செய்யும் போது அவர்களே விலையை தீர்மானிப்பார்கள். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் உத்தரவாத விலையை நிலையானதாக பேண வேண்டும். அப்போது தான் விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைவார்கள்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரவேற்கிறேன். நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் மக்களின் செயற்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். காலம் காலமாக அரசியல்வாதிகளை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருக்க கூடாது. க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை பாடசாலை கல்வி முறைமையில் இருந்து முன்னெடுக்க வேண்டும்.
அரச நிர்வாக கட்டமைப்பை ஆக்கிரமித்துள்ள ஊழலை முடிவுக்கு கொண்டு வராமல் நாட்டை முன்னேற்ற முடியாது. ஊழலுக்கு எதிராக செயற்படுவதாயின் விளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் குறித்து அரசாங்கம் விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி குறித்து பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஜனாதிபதியும் இதனை நன்கு அறிவார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM