ஆபிரிக்காவிலிருந்து ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகில் நடுக்கடலில் பிறந்தபெண் குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆபிரிக்காவிலிருந்து ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகில் குழந்தையொன்று பிறந்தது என ஸ்பெயினின் கடல்சார் மீட்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்
ஸ்பெயினின் கனரி தீவில் உள்ள மீட்பு பணியாளர்கள் காற்றுநிரப்பப்பட்ட படகொன்றை எதிர்கொண்டுள்ளனர்.
லன்ஜரோட் தீவின் கடலோரபகுதியில் காணப்பட்ட இந்த படகில் 14 பெண்கள் நான்கு சிறுவர்கள் உட்பட 60 பேர் காணப்பட்டுள்ளனர்.
'நாங்கள் அந்த படகை காப்பாற்றுவதற்கு 15 நிமிடங்களிற்கு முன்னர்தான் அதிலிருந்த தாய் தனது குழந்தையை பிரசவித்துள்ளார்" என ஸ்பெயின் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுமிகவும் உணர்வுபூர்வமான அழகான தருணம் என தெரிவித்துள்ள மீட்பு கப்பலின் தலைமை மாலுமி டொமிங்கோ ட்ரூஜிலோ தெரிவித்துள்ளார்.
எனினும் படகில் குழந்தை பிறந்ததை நான் எதிர்கொண்டது இது முதல்தடவையில்லை ஏற்கனவே 2020 இதுபோன்றதொரு அனுபவத்தை எதிர்கொண்டேன் குழந்தையின் தொப்புள்கொடியை துண்டித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை அழுதுகொண்டிருந்ததால் அது உயிருடன் உள்ளது எந்த பிரச்சினையும்; இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்,அந்த தாயை சுத்தம் செய்வதற்காக அனுமதியை கோரினோம், என தெரிவித்துள்ள அவர் தொப்புள்கொடியை ஏற்கனவே படகிலிருந்த ஒருவர் துண்டித்திருந்தார்,நாங்கள் குழந்தையை மருத்துவ பரிசோதனைக்குஉட்படுத்தி தாயிடம் கொடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் குழுவினர் களைப்படைந்துள்ளனர் ஆனால் தொடர்ந்தும் பணியில் ஆர்வத்துடன்ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ள மீட்பு கப்பலின் தலைமை மாலுமி டொமிங்கோ ட்ரூஜிலோ
ஒவ்வொரு நாளும் இரவில் பணிக்கு சென்று அதிகாலையில் திரும்புகின்றோம்,இது புதிதாக பிறந்த குழந்தை தொடர்பானது என்பதால் மிகவும் சாதகமான விடயம் நாங்கள் களைப்படைந்தாலும் மக்களிற்கு உதவுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தையும் தாயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என ஸ்பெயினின்கரையோர காவல்படையினர் தங்களது சமூக ஊடக செய்தியில் தெரிவித்துள்ளனர்.
கடலை கடக்க முற்பட்டவேளை பிறந்த குழந்தையுடன் மீட்புடன் கனரிசில் கிறிஸ்மஸ்முடிவிற்கு வந்தது என எங்கள் பணியாளர்கள் புதுவருடத்தை மிகச்சிறப்பான விதத்தில் ஆரம்பித்துள்ளனர் என ஸ்பெயினின் கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
2024 இல் 46843 குடியேற்றவாசிகள் கனரி தீவை சென்றடைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காண்பித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM