வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

10 Jan, 2025 | 11:50 AM
image

இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சந்தேக நபர் அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ஹுங்கம, அம்பலாந்தோட்டை, சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராமை ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு நபர்களிடம் இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி செய்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்  தலைமறைவாகி இருந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42