ஜிம்மி கார்ட்டரின் இறுதி நிகழ்வில் அமெரிக்காவின் ஐந்து ஜனாதிபதிகள் - டிரம்பை அலட்சியம் செய்த கமலா ஹரிஸ்

10 Jan, 2025 | 11:26 AM
image

கடந்த மாதம் தனது 100வது வயதில் காலமான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஐவர் ஒன்றாக கூடியிருந்த தருணத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹரிஸும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை புறக்கணித்தனர்.

வொஷிங்டனின் தேசிய கதீட்ரலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது கணவருடன் டொனால்ட் டிரம்புக்கு முன்வரிசையில் காணப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

பராக் ஒபாமாவுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் கமல ஹரிஸை பார்த்தவுடன் மௌனமானார்.

இதேவேளை தொலைக்காட்சி கமராக்கள் தன்னை நோக்கி திரும்பியதால் அசௌகரியமடைந்தவராக காணப்பட்ட கமலா ஹரிஸ் கதீட்ரலின் முன்பக்கத்தை பார்வையிட்டவாறு அமர்ந்திருந்தார்.

கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இருவரும் பொது நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டமை இதுவே முதல் தடவை.

2018இல் ஜோர்ஜ் புஷ்ஷின் இறுதி நிகழ்வின் பின்னர் ஐந்து ஜனாதிபதிகளும் ஒன்றாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளமையும் இதுவே முதல் தடவை. அவ்வேளை ஜோபைடன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

ஜனாதிபதிகள் கமலா ஹரிஸுக்குப் பின்னால் காணப்பட்ட ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். 

முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்சின் மனைவி கரென் பென்சும் டொனால்ட் டிரம்பை அலட்சியம் செய்தார். தனது கணவருடன் டிரம்ப் கைகுலுக்கியவேளை அவர் ஆசனத்திலேயே அமர்ந்திருந்தார்.

2021இல் ஜோபைடனின் வெற்றியை அங்கீகரிப்பதை மைக்பென்ஸ் தடுக்க முயன்றதை தொடர்ந்து டிரம்புக்கும் அவருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிம்மி கார்ட்டரின் வாழ்க்கையை கௌரவிக்கும் நிகழ்வுகள் ஒரு வாரத்துக்கு மேல் நடந்துவரும் நிலையிலேயே நேற்றைய நிகழ்வு நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55