(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாடரங்கில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் டெஸ்ட கிரிக்கெட் தொடரை முன்னிட்டு ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் குழாத்தில் 7 துடுப்பாட்ட வீரர்கள், 4 சகலதுறை வீரர்கள், 5 பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகிறார்கள்.
காலி சர்வதேச விளையாட்டரங்கு சுழல்பந்துவீச்சுக்கு சாதகம் என்பதால் 3 பிரதான சுழல்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறுகின்றனர்.
539 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியள்ள நேதன் லயன் சுழல்பந்துவீச்சில் பிரதான பங்களிப்பு செய்யவுள்ளார்.
அவருடன் 6 டெஸ்ட்களில் விளையாடி 21 விக்கெட்களைக் கைப்பற்றி தனது முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வரும் டொட் மேர்ஃபி, 3 டெஸ்ட்களில் மாத்திரம் விளையாடி 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ள மெத்யூ குனேமான் ஆகியோர் சுழல்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம்பெறுகின்றனர்.
இந்த மூவரைவிட பகுதிநேர பந்துவீச்சாளர்களாக பயன்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியவர்களாக துடுப்பாட்ட வீரரும் அணித் தலைவருமான ஸ்டீவன் ஸ்மித் (19 விக்கெட்கள்), துடுப்பாட்ட வீரரும் அணியின் உதவித் தலைவருமான ட்ரவிஸ் ஹெட் (14 விக்கெட்கள்), அறிமுக சகலதுறை வீரர் கூப்பர் கொனலி ஆகியோர் கருதப்படுகின்றனர்.
அவுஸ்திரேலியாவின் எதிர்கால நட்சத்திர சகலதுறை வீரராக கூப்பர் கொனலி கருதப்படுகிறார். இவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக விளையாடி இருந்தார்.
இந்தியாவுக்கு எதிராக போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர்களாக இடம்பெற்று சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 19 வயதான ஆரம்ப வீரர் சாம் கொன்ஸ்டாஸ், 31 வயதான சகலதுறை வீரர் போ வெப்ஸ்டர் ஆகியோரும் இலங்கை வருகைதரும் அவுஸ்திரேலியா அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதுலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க, தனது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகவிருப்பதாலும் கணுக்காலில் உபாதை ஏற்பட்டிருப்பதாலும் வழமையான அணித் தலைவர் பெட் கமின்ஸ் இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை தவிர்த்துக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அணித் தலைமைப் பொறுப்பு ஸ்டீவன் ஸ்மித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் உதவி அணித் தலைவராக ட்ரவிஸ் ஹெட் செயற்படவுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியா டெஸ்ட் குழாம்
ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ட்ரவிஸ் ஹெட் (உதவித் தலைவர்), அலெக்ஸ் கேரி, ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னுஸ் லபுஷேன் (ஏழு பேரும் துடுப்பாட்ட வீரர்கள்), சோன் அபொட், கூப்பர் கொனலி, நேதன் மெக்ஸ்வீனி, போ வெஸ்டர் (நால்வரும் சகலதுறை வீரர்கள்), ஸ்கொட் போலண்ட், மெத்யூ குனேமான், நேதன் லயன், டொட் மேர்ஃபி, மிச்செல் ஸ்டார்க் (ஐவரும் பந்துவீச்சாளர்கள்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM