அமெரிக்க மினிசோட்டா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் குவாட்ரி இஸ்மாயிலின் நினைவாக முன்னெடுக்கப்படவுள்ள புத்தக நன்கொடை வழங்கலின் அறிமுக நிகழ்வு நாளைய தினம் (11) பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் 1961 நவம்பர் 7 ஆம் திகதி பிறந்த குவாட்ரி இஸ்மாயில், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்தார். கலாசாரக் கற்கைகள், காலனித்துவத்தின் பின்னரான இலக்கியம், பால் மற்றும் பாலினம் ஆகிய துறைகளில் தேர்ச்சிபெற்ற அவர், 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மினிசோட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இணைந்துகொண்டார். அங்கு சமத்துவம், பல்வகைமை மற்றும் உள்வாங்கல் குழுவின் தலைவர், பட்டக்கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு பதவிகளை வகித்தார்.
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகரும், புத்திஜீவியுமான குவாட்ரி இஸ்மாயில், இலங்கையின் 'சன்டே லீடர்' பத்திரிகை, 'கிரவுண்ட் வியூஸ்' இணையத்தளம் ஆகியவற்றில் நீண்டகாலமாக பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
அவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2 ஆம் திகதி இயற்கை எய்தினார்.
அவரது நினைவாக முன்னெடுக்கப்படும் புத்தக நன்கொடை வழங்கல் நிகழ்வு நாளை சனிக்கிழமை (11) பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் லண்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய இலக்கியத்துறை பேராசிரியர் ருவானி ரணசிங்க மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM