பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டின் பேரில், அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை எகிப்து அரசாங்கம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஆதரவான செய்திகளும், பொய்யான தகவல்களும் இடம்பெறுவதாகக் கூறியே இந்த இணைய தளங்களை எகிப்து அரசு முடக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இச்செய்தியை உறுதிசெய்யவோ, மறுக்கவோ முன்வராத எகிப்து அரசு ஊடகம் ஒன்று, ‘அச்செய்தி உண்மையாகவே இருந்தாற்றான் என்ன? இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேற்படி இணைய தளங்கள் மீது எகிப்து அரசு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.