குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

Published By: Digital Desk 2

09 Jan, 2025 | 03:26 PM
image

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அடிப்படைத் தேவை உழைப்பு, முதலீடு, அறிவு, தொழில்நுட்பம், நட்பு ,கடன்,  இவற்றையெல்லாம் விட குலதெய்வத்தின் அருள், ஆசி ஆகிய இரண்டும் தான் அவசியம் தேவை. வெற்றி பெற்ற சாதனையாளர்கள் அனைவரும் தங்களின் கடும் உழைப்பிற்கு குலதெய்வத்தின் பரிபூரண ஆசிதான் காரணம் என்பதை பகிரங்கமாகவே ஒப்புக் கொள்கிறார்கள். திறமை இருந்தும் வாய்ப்பு இருந்தும் ஜொலிக்க முடியாத ஏராளமானவர்கள் குலதெய்வத்தின் அருள் பார்வை கிடைக்காத காரணத்தினால் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க முடியாமல் அதனை எட்ட இருந்து பார்த்து ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் எம்முடைய முன்னோர்கள் குலதெய்வத்தின் அருளைப் பெறுவதற்கான எளிய வழிமுறையை முன்மொழிந்திருக்கிறார்கள்.

பொதுவாக குலதெய்வத்தை குறிப்பிடுவது உங்களுடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் சனி பகவான் தான். சனி பகவான் அமர்ந்திருக்கும் வீடு- சனி பகவான் அமர்ந்திருக்கும் நட்சத்திர சாரம் ,சனி பகவானின் பார்வை பதியும் வீடுகள், ஆகியவற்றை துல்லியமாக தொடர்ந்து அவதானித்தால், உங்களுடைய குலதெய்வம் யார்? என்பது தெரியவரும். இது தொடர்பாக எம்முடைய சோதிட நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில் உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறாரோ அந்த வீட்டிலிருந்து ஆறாம் வீட்டில் புதன், சூரியன், சந்திரன், ஆகிய கிரகங்கள் இருந்தால் நீங்கள் குலதெய்வத்தின் சாபம் பெற்றவர்களாக இந்த பிறவியில் பிறந்திருக்கிறீர்கள் என பொருள் கொள்ளலாம். அதாவது உங்களுக்கு குலதெய்வம் தொடர்பான குற்றம் அல்லது சாபம் அல்லது தோஷம் இருக்கிறது என பொருள்.

உடனே எம்மில் பலரும் தங்களது சுய ஜாதகத்தை எடுத்து பார்த்து, ஆமாம்  எம்முடைய ஜாதகத்தில் சனி பகவான் இருக்கும் இடத்திலிருந்து ஆறாம் வீட்டில் சூரியன் இருக்கிறது..! என்றும், ஆறாம் வீட்டில் புதன் இருக்கிறது..! என்றும், ஆறாம் வீட்டில் சந்திரன் இருக்கிறது..! என்றும் அவதானிப்பார்கள். இவர்கள் அனைவரும் குலதெய்வத்தின் அருளை பெறாதவர்கள். அதாவது குலதெய்வத்தை வணங்குவதில் இடைநிறுத்தம் ஏற்பட்டு, அதனால் அந்த குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி இருப்பார்கள். இவர்களுக்குத்தான் வளர்ச்சி என்பது இருக்காது அல்லது ஒரு எல்லைக்கு மேல் அவர்களால் திறமை இருந்தும் முன்னேற முடியாமல் ஒரே இடத்தில் தேக்கமடைந்து இருப்பர்.

இவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் பின்வரும் மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அல்லது உங்கள் வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.

அந்த மந்திரம் இதுதான்

'' ஓம் என் குலதெய்வம் வர வர

ஓம் வம் வம் உம் உம் என் படி

ஏறி வா வா என் குலதெய்வமே..!''

இந்த மந்திரத்தை நாளாந்தம் தொடர்ந்து உச்சரித்து வந்தால் உங்களுக்கு அறிமுகமான அல்லது அறிமுகமற்ற நபர்கள் மூலமாகவோ அல்லது நீங்கள் காணும் இணையதள காணொளி மூலமாகவோ உங்களுடைய குலதெய்வம் குறித்த குறிப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

அதன் பிறகு நீங்கள் உங்களுடைய பிறந்த மாதத்தில் இருந்து ஐந்தாவது மாதம் அல்லது ஒன்பதாவது மாதத்தில் குலதெய்வ ஆலயத்திற்கு வர விரும்புகிறேன் என்று அதற்கு அனுமதி வேண்டும் என்றும் மனதார பிரார்த்தனை செய்து விரதம் இருக்க வேண்டும். அதன் பிறகு உங்களது குலதெய்வ ஆலயத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தொடர்ந்து குலதெய்வ ஆலயத்திற்கு சென்று முறையாக பிரார்த்தனையை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து வாழ்க்கையில் வெற்றியும் , முன்னேற்றமும் கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14