நடிகர் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' டென் ஹவர்ஸ் ' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் உருவாகி வரும் ' டென் ஹவர்ஸ் ' எனும் திரைப்படத்தில் சிபி சத்யராஜ், திலீபன், ஜீவா ரவி , சரவண சுப்பையா, கஜ ராஜ், ராஜ் ஐயப்பா , 'ஆடுகளம்' முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே .எஸ் . சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டுவின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாலு & துர்காயினி வினோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் வழங்குகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனத்தை கவர்ந்த நிலையில் இதன் முன்னோட்டம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் தனியார் பேருந்து ஒன்றில் பயணிக்கும் பயணிகளிடையே நடைபெறும் குற்ற சம்பவமும், அது தொடர்பான காவல்துறையின் புலன் விசாரணையும் விறுவிறுப்பான காட்சிகளாக இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM