தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ' ரெட்ரோ ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ' ரெட்ரோ 'எனும் திரைப்படத்தில் சூர்யா , பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் , ஜெயராம் , கருணாகரன், நாசர் , பிரகாஷ் ராஜ் , சுஜித் சங்கர் , தமிழ் , ஜார்ஜ் மரியான், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் 'சிவாஜி' படம் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரேயா சரண் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் எக்சன் ஜேனரிலான இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி 23 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தை பார்த்து ரசிப்பதற்கான ஆர்வத்தை அதிகரித்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் ,தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படம் வெளியீட்டிற்கு முன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை படக் குழுவினர் அதீதமாக எகிற வைத்ததால். அதுவே படத்திற்கு எதிர்மறையான விடயமாக மாறி, படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது. இந்நிலையில் சூர்யாவின் ' ரெட்ரோ ' திரைப்படம் மே மாதம் முதல் திகதியன்று வெளியாகிறது.
மே மாதம் முதல் திகதி என்பது அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரிய நாளாகும். இந்த நாளில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ 'திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் ஆதரவளிப்பார்களா..!? என்பது விரைவில் தெரியவரும். மேலும் விஜயின் ரசிகர்கள் 'அமரன் ' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு அளித்து வருவதால் அஜித் ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக சூர்யாவின் திட்டம் இது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM