காலி பிரதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை விக்கெட் பொல்லால் தாக்கிய உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மாணவனை இன்று காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே ஒரு இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர் தெரிவித்ததையடுத்தே குறித்த மாணவர் அவரைத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.