29 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

09 Jan, 2025 | 02:15 PM
image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 29 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்றைய தினம் இரவு 07.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர், சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது,  சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 19,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 99 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57