சொந்தத் தங்கைக்கு போதை மருந்து ஊட்டி பாலுறவு கொண்டு கர்ப்பிணியாக்கிய அண்ணனுக்கு ஆறு மாத நன்னடத்தைக் காலம் வழங்கப்பட்டிருப்பது கலிஃபோர்னியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருபதே வயதுடைய கலிஃபோர்னிய இளைஞர் ஒருவர், பதினாறு வயதே நிரம்பிய தனது தங்கைக்கு அதி திறன் கொண்ட மரிஜுவானா போதைப் பொருளை பலவந்தமாக ஊட்டியிருக்கிறார். பின்னர் தங்கையிடம் ‘உறவு கொள்வோமா’ என்று பல முறை கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்.

பல முறை அதற்கு மறுப்புத் தெரிவித்தபோதும், போதையின் உச்சத்தில் தன்னிலை மறந்த தங்கை கடைசியில் சரி என்று சொல்லவே, தனது சொந்தத் தங்கையை பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச தரப்பில் வாதாடிய சட்டத்தரணி, குறித்த இளைஞர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

என்றபோதும், குறித்த இளைஞருடனான பிரத்தியேக விசாரணையின்போது தனது செயல் குறித்து அவர் வருந்தவில்லை என்றும், இதனால் அவருக்கு மன வள ஆலோசனையே தேவை என்பதால் நன்னடத்தைக் காலம் மட்டுமே விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இத்தீர்ப்பு கலிஃபோர்னிய மக்களை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.