ஊழல், மோசடி, நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் பிரதிபலன்களை நாட்டு மக்கள் ஒரு மாத காலத்தில் அறிந்து கொள்ள முடியும் - அமைச்சர் ஆனந்த விஜேபால

Published By: Vishnu

09 Jan, 2025 | 04:32 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாத காலத்தில் அதன் பிரதிபலன்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல ஒழுங்குவிதிகள்  மீதான விவாதத்தில்  உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்ட சில விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபையில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழல் எதிர்ப்பு விசாரணைக் குழுவின் தலைவராக செயற்பட்டார் என குறிப்பிட்டார். அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறு எந்த குழுவிலும் அவர் தலைவராக செயற்படவில்லை. நான் ஊழல் ஒழிப்பு குழுவில் பணிப்பாளராக செயல்பட்டுள்ளேன் என்பது வேறுவிடயம்.

தற்போதைய அரசாங்கம் இலஞ்சம்,ஊழல், மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இன்னும் ஒரு மாத காலம் பொறுமையாக இருக்க முடியுமென்றால் அதன் பிரதிபலன்களை காண முடியும். நாம் ஒருபோதும் அதனை அரசியலாக்கவில்லை.

பொலிசாரின் செயற்பாடுகளை நாம் அரசியலிலிருந்து விடுவித்துள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு  முழுமையான பொறுப்பை நாம் வழங்கியுள்ளோம்.

அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக நடைபெற்று வருகின்றன. அதன் பிரதி பலன்களை ஒரு மாதகாலத்தில் நாட்டுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். எவர் செய்தாலும் ஊழல், மோசடி, நிதி முறைகேடுகளுக்கு எதிராக எமது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் இந்த சபையில் உறுதியளிக்கின்றோம்.

தேசிய மக்கள் முன்னணி அரசாங்கம் நாட்டு மக்களுடனேயே உடன்படிக்கை செய்துள்ளது. மக்கள் வழங்கிய ஆணை,நாட்டின் இறைமை தொடர்பில் சிந்தித்தே நாம் செயற்படுகின்றோம் என்பதால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17