தமிழ் திரையுலகின் சந்தை மதிப்பு கொண்ட முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காதலிக்க நேரமில்லை ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் ' காதலிக்க நேரமில்லை 'எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி ,நித்யா மேனன் ,யோகி பாபு , வினய் ராய் ,டி ஜே பானு, லால் , லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கேவ்மிக் ஆரே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் கதையின் நாயகியான நித்யா மேனனின் கதாபாத்திரம் பேசும் உரையாடல்கள் - சனாதன தர்மத்திற்கு எதிராகவும் , பெண்ணியத்திற்கு ஆதரவாகவும் இருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
திருமணத்திற்கு முன்னர் உடலுறவு - குழந்தை பெற்றுக்கொள்ள ஆண் அவசியமில்லை- இது போன்ற உரையாடல்கள் இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM