அறிமுக நடிகர் தேவ் கதையின் நாயகனாக நடிக்கும் ' யோலோ ' எனும் திரைப்படம் அழகான காதல் படைப்பாக தயாராகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் எஸ். சாம் இயக்கத்தில் உருவாகி வரும் ' யோலோ ' எனும் திரைப்படத்தில் தேவ் , தேவிகா, படவா கோபி, பிரவீண், சுவாதி, ஆகாஷ் , திவாகர் , யுவராஜ் , சுபாஷிணி கண்ணன், வி ஜே நிக்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்து வருகிறார்.
ரொமான்டிக் காமெடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில் , '' இன்றைய இணைய தலைமுறையினரின் வாழ்வியலை பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது. இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை.. வேறு இரண்டு பேர் வாழ்வார்கள்.
அது எப்படி? என்பதை தான் இந்த படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை ஒருமுறைதான். அதனை அனுபவித்து நன்றாக வாழுங்கள் என்பதை கமர்சியல் அம்சங்களுடன் விவரித்திருக்கிறோம் ''என்றார் .
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM