( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற பெண் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சபையில் வலியுறுத்தினர்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ,
அம்பாறைக்கும் மட்டக்களப்புக்கும் இடைப்பட்ட பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணொருவர் அங்கிருந்த அறையொன்றில் பூட்டப்பட்டு பெண்ணென்றும் பாராது படுமோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடலில் எல்லா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் கிளீன் ஶ்ரீலங்கா பற்றி பேசிக் கொண்டிருக்கையில் எங்கேயோ அதனை அசுத்தப்படுத்தும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண்ணுக்கு மரியாதை கொடுக்கும் நாடாகவே இலங்கையைப் பார்க்கின்றோம். ஆனால் தெருவில் செல்லும் போது அந்தப் பெண்ணை ஒருவர் சேட்டையாக சைகை மூலம் துன்புறுத்திய காரணத்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் சென்றபோது குறித்த பெண் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்தப் பெண் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுகின்றார்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் , கல்முனை பெரியநீலாவணையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண்ணை தனிப்பட்ட முறையில் பொலிஸ் அதிகாரிகள் தகாத முறையில் பேசியதுடன் பொலிஸ் நிலையத்தை மூடி விட்டு அவரை துன்புறுத்தி கொடூரமாகத் தாக்கி வன்புணர்வுக்கு உள்ளாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுளார்கள். அந்தப் பெண்ணின் மார்பகம், பின்புறம் என பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
சினிமாவில்தான் நாம் இவ்வாறான செயற்பாடுகளைப் பார்த்துள்ளோம். பொலிஸாரின் இந்த கேவலமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.இதில் தொடர்புபட்ட பொலிஸாருக்கு எதிராக கடும்மையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, நடந்த சம்பவம் தொடர்பிலான விபரங்களை எனக்குத் தாருங்கள். நான் நாளை வியாழக்கிழமை (09) விசாரணைகள் முன்னெடுக்கிறேன். சம்பந்தப்பட்ட பொலிஸார் தொடர்பில் ஒழுக்க விசாரணைகள் நடத்தப்படும். தவறு நேர்ந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயம் நாம் அந்தப்பெண்ணுக்கு நியாயம் வழங்குவோம்.
எதிர்தரப்பினரை போன்று நீங்களும் அனைத்துக் கும் க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை தொடர்புப்படுத்தி பேசாதீர்கள். சட்டத்துக்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருந்தால் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM