மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷேன் நிஹாம் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ' மெட்ராஸ்காரன் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றது.
இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மெட்ராஸ்காரன் ' எனும் திரைப்படத்தில் ஷேன் நிஹாம் ,கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சுப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே எதிர்வரும் பத்தாம் திகதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
அந்நிகழ்வில் இயக்குநர் வாலி மோகன்தாஸ் பேசுகையில், '' என்னையும், என் கதையையும் நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக உருவாகி இருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறோம். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM