'கே ஜி எஃப் ' 1 & 2 படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான யஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டாக்ஸிக் - ஏ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்' எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகையும் , சர்வதேச விருதுகளை வென்ற இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ' டாக்ஸிக் - ஏ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ் ' எனும் திரைப்படத்தில் நடிகர் யஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா மற்றும் நடிகர் யஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 39 ஆவது பிறந்த நாள் காணும் நட்சத்திர நடிகர் யஷ்ஷின் ரசிகர்களுக்காக 'டாக்ஸிக்' படத்தின் பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் யஷ்ஷின் தோற்றமும், அறிமுகமும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருப்பதால்.. ரசிகர்களின் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM