புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

08 Jan, 2025 | 07:25 PM
image

எம்மில் சிலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதன் காரணமாக அவர்கள் வைத்தியர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவார்கள்.

இவர்கள் ஆகாய மார்க்கமான பயணத்தையும் தவிர்க்குமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தி இருப்பார்கள். ஆனால் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதற்கான மருத்துவ ரீதியிலான பின்னணி என்ன ? என்பது குறித்து தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

நுரையீரலில் ஏற்படும் ஒரு வகையான பாதிப்பு தான் புல்லஸ் எம்பஸிமா. இத்தகைய பாதிப்பு ஏற்படும்போது நுரையீரலில் உள்ள காற்று பைகளில் இயல்பான அளவைவிட கூடுதலாக வீக்கம் ஏற்பட்டிருக்கும்.

மருத்துவ மொழியில் இத்தகைய காற்று பைகளை அல்வியோலி எனக் குறிப்பிடுவார்கள். இந்த  காற்று பைகளின் சுவர்களில் ஏற்படும் சேதம் காரணமாக நீங்கள் சுவாசிக்கும் ஓக்சிஜனின் அளவு குறையும். 

மேலும் கார்பன் டை ஓக்சடை வெளியேற்றும் பணியிலும் குறைபாடு உண்டாகும். பொதுவாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரலில் உள்ள காற்று பைகளின் வீக்கம் ஒரு சென்டிமீற்றருக்கு மேல் பெரியதாக இருக்கும். 

சிலருக்கு நுரையீரலில் இரண்டு பகுதிகளும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் சுவாசிப்பதை கடினமாக்கி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இத்தகைய பாதிப்பு புகை பிடிப்பவர்களுக்கு பாரிய அளவில் ஏற்படுகிறது. வெகு சிலருக்கே சில பிரத்யேக மருந்துகளின் பக்க விளைவாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. 

மேலும் ரத்த அழுத்தம் அதிகரித்தல், நெஞ்சுவலி, அதிகாலை ஏற்படும் இருமல், சோர்வு, குமட்டல், மூச்சுத் திணறல்.. போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

இத்தகைய அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், குருதி பரிசோதனை, எலக்ட்ரோ கார்டியோ கிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். 

இதனைத் தொடர்ந்து பாதிப்பின் வீரியத்தையும், தன்மையையும் பொறுத்து வைத்தியர்கள் நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையில் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பர். வெகு சிலருக்கு மட்டும் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க வேண்டியதிருக்கும்.

வைத்தியர் சுப்ரஜா -  தொகுப்பு அனுஷா  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15