எம்மில் பலரும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து உழைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றமும், வளர்ச்சியும் குறைந்தபட்ச அளவு கூட கிடைக்கவில்லை என்றால்... விரக்தியும், வெறுப்பும் கொள்கிறார்கள்.
இதுகுறித்து அவர்களுக்கு யாரேனும் அறிவுரையை கூறினாலும்.. ஏற்க மறுப்பு தெரிவித்து விடுவார்கள். உழைப்புதான் மூலதனம் மற்றவை எல்லாம் வீண் என்பதுதான் இவர்களுடைய கொள்கையாக இருக்கும்.
ஆனால் வெற்றி பெற்றவர்கள்- சாதனையாளர்கள் - அனைவரும் கடும் உழைப்புடன் எம்மை எல்லாம் ஆக்கிரமித்து ஆட்டுவிக்கும் இறை ஆற்றலும் தங்களின் வெற்றிக்கு காரணம் என பகிரங்கமாக சொல்கிறார்கள்.
இந்நிலையில் வெற்றி எம்மை அணுகாது இருக்கிறது என்றால்.. எம்மிடமுள்ள கடின உழைப்பில் குறையில்லை. ஆனால் எதிர்மறை ஆற்றல் எம்மை ஆக்கிரமித்து இருப்பதால்.. கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை
என பொருள் கொள்ளலாம். வெற்றி எம்மை தொட வேண்டும் என்றால்.. எம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும். இதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இரண்டு வகையினதான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் - லவங்க பட்டை தூள்
உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயத்தில் வராகி அம்மனுக்கு சிலை இருந்தால்.. அந்த அம்மனுக்கு வெள்ளிக்கிழமையிலோ அல்லது நீங்கள் பிறந்த கிழமையிலோ மஞ்சள் காப்பு சாற்றி வழிபட வேண்டும்.
அந்த ஆலயத்தில் இறைவனுக்கு தொண்டு செய்யும் ஊழியரிடம் வராகி அம்மன் மீது சாற்றப்பட்டிருக்கும் மஞ்சளை 24 மணி தியாலத்திற்குப் பிறகு களைந்து, தனியாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுங்கள்.
அதன் பிறகு அதனை சேகரித்து வீட்டிற்கு எடுத்து வாருங்கள். அதிலிருந்து சிறிதளவு மஞ்சளை எடுத்து தண்ணீரில் கலந்து அதனை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.
குறிப்பாக வாசலில் தெளித்து விடுங்கள். இவை எவ்வளவு வலிமைமிக்க எதிர்மறை ஆற்றல்கள் உங்களுடைய வீட்டில் இருந்தாலும் அதனை ஓட ஓட விரட்டி விடும்.
இதனைத் தொடர்ந்து இலவங்க பட்டை தூளை வாங்கி அதில் சிறிதளவை உங்கள் வீட்டின் வாசலில் தெளித்து விடுங்கள்.
அதன் பிறகு வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது அதாவது வாழ்வாதாரத்திற்காக பணியாற்ற கிளம்பும்போது சிறிதளவு இலவங்க பட்டை தூளை கொண்டு உங்களுடைய கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்களுடைய வீடும், நீங்களும் நேர் நிலையான ஆற்றலை பெறுவீர்கள். அதன் பிறகு உங்களுடைய உழைப்பு கடுமையானதாக இல்லாமல் புத்திசாலித்தனமாக இருப்பதுடன் லாபமும், வளர்ச்சியும், முன்னேற்றமும் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM