பேக்கரியில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ; பாணந்துறையில் சம்பவம்

08 Jan, 2025 | 06:29 PM
image

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் இருந்து லைட்டர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை அருக்கொடை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு இன்றைய தினம் காலை சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த தந்தை தனது இரண்டு மகன்களுக்கும் பேக்கரியில் இருந்து இரண்டு மீன் பாண்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு மகன் மீன் பாணை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருப்பதை கண்டு தனது தந்தையிடம் அதனை காண்பித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த தந்தை முறைப்பாடு வழங்குவதற்காக பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு சென்றுள்ளார். 

இதன்போது, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள், இந்த போக்கரி பாணந்துறை மாநகர சபைக்குட்பட்டது எனவும் இது தொடர்பில் மாநகர சபைக்குட்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் முறைப்பாடு வழங்குமாறும் குறித்த தந்தையிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56