இலங்கை கடற்­படை வசம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன்­பிடி பட­கு­களில் 42 பட­கு­களை விரைவில் விடு­விக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இலங்­கையின் நிபந்­த­னை­களை இந்­தியா ஏற்­று­க்கொண்டால் இவை உட­ன­டி­யாக விடு­விக்­கப்­படும் என்று கடற்­றொழில் மட்டும் நீரி­யல்­வள அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். 

Image result for இந்திய  virakesari

இலங்கை கடல் எல்­லையில் அத்­து­மீ­றினால் தொடர்ந்தும் கைதுகள் தொடரும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

இலங்கை கடல் எல்­லையில் இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரும் நிலையில் கடந்த காலத்தில் இந்­திய மீனவர் தரப்­புடன் இலங்கை அர­சியல் தரப்பு உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டது. அதேபோல் அதி­கா­ரிகள் மட்ட பேச்­சு­வார்த்­தை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.அதற்­க­மைய இரு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் இணக்­கப்­பாடு அடிப்­பை­டயில் சில கார­ணி­களை ஏற்­றுக்­கொண்­டுள்ளோம். 

குறிப்­பாக இலங்கை கடல் எல்­லையில் இந்­திய தமி­ழக மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி மற்றும் சட்­ட­வி­ரோத மீன்­பிடி நட­வ­டிக்­கைகள் இலங்­கையின் வட­ப­குதி மீன­வர்­களை பெரிதும் பாதித்­தி­ருந்த நிலையில் அவர்கள் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் எமக்கு முறை­யிட்­டி­ருந்­தனர். 

அதற்­க­மை­யவே நாம் இந்­திய தரப்­புடன் பல்­வேறு மட்ட பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். அந்த வகையில் எமது கோரிக்­கை­களை இந்­திய தரப்­பினர் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர், குறிப்­பாக சட்­ட­வி­ரோதம் என கருதி இலங்­கையில் தடை செய்­யப்­பட்­டுள்ள மீன்­பிடி முறை­மையில் எக்­கா­ர­ணத்தை கொண்டும் இலங்கை கடல் எல்­லையில் மீன்­பி­டி­களை மேற்­கொள்ள கூடாது என்­ப­தையும் அத்­து­மீ­றல்­களை தடுக்க வேண்டும் என நாம் அழுத்­த­மாக வலி­யு­றுத்­தி­யுள்ளோம். 

அதை அவர்கள் ஏற்­று­க்கொண்­ட­தற்கு அமைய தடுத்­துள்­ளனர். அந்த வகையில் அண்மைக் கால­மாக இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி ஐம்­பது வீதத்­தினால் குறை­வ­டைந்­துள்­ளது. இது எமக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும். நாம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் எமது மீன­வர்­களின் நலன்­களை கருத்தில் கொண்டே செயற்­பட்டு வரு­கின்றோம். 

மேலும் இலங்­கையின் வசம் உள்ள இந்­திய மீன­வர்­களின் பட­கு­களை விடு­விக்க வேண்டும் என அவர்கள் தொடர்ச்­சி­யாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். அந்த வகையில் அவர்­களின் கோரிக்­கை­களுக்கமைய 42 பட­கு­களை விரைவில் விடு­விக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

இந்­திய தூத­ர­கத்­திற்கு இந்த தக­வலை நாம் தெரி­வித்­துள்ளோம். எனினும் எமது நிபந்­த­னை­க­ளுக்கு அமை­யவே இவை விடு­விக்­கப்­படும். எமது நிபந்­த­னை­களை மறுக்கும் பட்­சத்தில் பட­கு­களை மீள­வ­ழங்கும் தீர்­மானம் நிரா­க­ரிக்­கப்­படும்.  

அதேபோல் பட­கு­களை நாம் மீண்டும் வழங்குகின்றோம் என்பதற்காக இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்ற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை. இப்போது படகுகளை கொடுத்தாலும் எமது எல்லைக்குள் அத்துமீறும் படகுகளை நாம் தொடர்ச்சியாக கைப்பற்றுவோம். இந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.