திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பம் - 450 பேர் உயிருடன் மீட்பு

08 Jan, 2025 | 02:47 PM
image

திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொலைதூர பகுதிகளில் உயிருடன் இருக்ககூடியவர்கள் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது.

450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள பகுதியை தாக்கிய பூகம்பம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது என சீன  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடும் குளிர் நிலவுகின்றது இதனால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள சீனஊடகங்கள் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான சீனாவின் துணை பிரதமர் திபெத் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளன.

இந்த பகுதி ஒரு பெரிய பிழைக்கோட்டில் அமைந்துள்ளதால் இங்கு பூகம்பங்கள் என்பது பரவலான விடயம்.

எனினும் செவ்வாய்கிழமை பூகம்பம் சமீபத்தைய சீன வரலாற்றில் மிக மோசமான ஒன்று.

ரிச்டர் அளவையில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் நேபாளம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திபெத்தினை சீனா கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . இங்கு இணையசேவைகள் கட்டுப்படுத்தப்பட்டு;ள்ளன, அரசாங்கத்தின் அனுமதியின்றி செய்தியாளர்கள் செயற்பட முடியாது. இதன் காரணமாக பூகம்பம் குறித்து சீன ஊடகங்களின் மூலமே அறிந்து கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் பகுதிகளில் மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சீன ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மீட்பு பணியாளர்களிற்கு உதவுவதற்காக சீன விமானப்படையின் விமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, ஆளில்லா விமானங்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

30,000 மக்கள் அந்த பகுதியில் இடம்பெயர்ந்துள்ளனர் என சீன அரசாங்கத்தின் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

பூகம்பம் மையம் கொண்டிருந்த டிங்கிரி கன்ரியில் ; தொலைபேசி இணையசேவைகளை சரி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

35000 கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03