நியூஸிலாந்துக்கு எதிராக ஹெட் - ட்ரிக் பதிவு செய்து வரலாறு படைத்தார் மஹீஷ் தீக்ஷன

Published By: Digital Desk 7

08 Jan, 2025 | 05:08 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக ஹெமில்டனில் இன்று புதன்கிழமை நடைபெறும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஹெட் - ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார்.

இந்த வருடம் பதிவான முதலாவது சர்வதேச கிரிக்கெட் ஹெட் - ட்ரிக் இதுவாகும்.

நியூஸிலாந்துக்கு எதிராக ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையையும் அவர் நிலைநாட்டினார்.

அத்துடன் நியூஸிலாந்துக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது வீரரானார் மஹீஷ் திக்ஷன.

இலங்கை சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்கள் சரித்தவர்கள் பட்டியலில் மஹீஷ் தீக்ஷன 7ஆவது  வீரராக இடம்பிடித்துள்ளார்.

மழையினால் தாமதித்து ஆரம்பமான இப் போட்டி அணிக்கு 37 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட நடத்தப்படுகிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை சற்று நேரத்திற்கு முன்னர் 13 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் 35ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், நேதன் ஸ்மித் ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்த மஹீஷ் தீக்ஷன 37ஆவது ஓவரின் முதல் பந்தில் மெட் ஹென்றியை ஆட்டம் இழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கை பூர்த்திசெய்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட் - ட்ரிக் பதிவுசெய்த ப்றூஸ் றீட் (அவுஸ்திரேலியா - சிட்னி 1986), சேத்தன் ஷர்மா (இந்தியா - நாக்பூர் 1987), வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான் - ஈஸ்ட் லண்டன் 1994), ரூபெல் ஹொசெயன் (பங்களாதேஷ் - டாக்கா 2013) ஆகியோருடன் மஹீஷ் தீக்ஷன இணைந்துகொண்டார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் ஹெட் - ட்ரிக் பதிவுசெய்த இலங்கை வீரர்கள்

சமிந்த வாஸ் (2 தடவைகள் எதிர் ஸிம்பாப்வே - 2001, எதிர் பங்களாதேஷ் - 2003), லசித் மாலிங்க (3 தடவைகள் எதிர் தென் ஆபிரிக்கா -2007, எதிர் கென்யா - 2011, எதிர் அவுஸ்திரேலியா 2011), பெர்வீஸ் மஹறூவ் (எதிர் இந்தியா - 2010), திசர பேரேரா (எதிர் பாகிஸ்தான் - 2012), வனிந்து ஹசரங்க (எதிர் ஸிம்பாப்வே 2018), ஷெஹான் மதுஷன்க (எதிர் பங்களாதேஷ் 2018), மஹீஷ் தீக்ஷன (எதிர் நியூஸிலாந்து - 2025)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04