யுவதி மீது பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த விடுதி ஊழியர் கைது செய்­யப்­பட்டு, பண்­டா­ர­வளை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­ட வேளை, நீதி­பதி அந்­ந­பரை கடு­மை­யாக எச்­ச­ரித்­­து ஆயி­ரத்து ஐநூறு ரூபா அப­ரா­தத்தை விதித்து, ஐந்து வருட ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத்­தண்­ட­னை­யையும் விதித்தார். 

எல்ல உல்­லாச விடு­தியில், உல்­லாச பிர­யா­ணி­க­ளாக தங்­கி­யி­ருந்த பெரூட் நாட்டின் இரு யுவ­தி­களில் ஒரு யுவதி மீதே, பாலியல் ரீதியில் குற்­ற­மி­ழைத்­துள்­ளார். 

இது குறித்து, பாதிக்­கப்­பட்ட யுவதி, எல்ல பொலிஸ் நிலை­யத்தில் செய்­த புகா­ரை­ய­டுத்து, பொலிஸார் விரைந்து, குறிப்­பிட்ட விடுதி ஊழி­ய­ரான  32 வயது நிரம்­பிய இரு பிள்­ளை­க­ளின் தந்தை ஒருவரை சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­தனர்.