(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்  ஹியூகோ ஸ்வையார்  நாளை யாழில் இடம்பெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, அங்கு விஜயம் செய்யும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் , மீள்குடியேற்றமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரென பலரையும் சந்தித்து வடக்கின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.