நாட்டில், 60 சதவீதத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் கருத்தடை செய்யப்பட்டும், 80 சதவீதத்திற்கும் அதிகமான விசர் நாய்க்கடி உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட போதிலும், மக்கள் பொறுப்பற்ற முறையில் நாய்க்குட்டிகளை வீதிகளில் கைவிடுகின்றனர் என விலங்குகள் நலக் கூட்மைப்பின் இலங்கைக்கான செயற்குழு உறுப்பினர் வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
85 சதவீதமான செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எங்கு செல்வது அல்லது யாரை அணுகுவது என்பது இன்னும் தெரியவில்லை.
அவர்களுக்கு சரியான திட்டங்கள் அல்லது அமைப்புகள் இருந்தால், அவர்கள் தங்கள் நாய்களை கருத்தடை செய்வார்கள்.
ஒரு முறையான திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். முன்மொழிவுகள் செய்யப்பட்டும், உள்கட்டமைப்புகள் உள்ளன மற்றும் திட்டத் திட்டங்கள் தயாராக உள்ளன, துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதைத் தடுக்கிறது.
ஸ்பே-நியூட்டர்-தடுப்பூசி திட்டங்கள் மூலம் மனிதநேயமாக நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும். அநுராதபுரம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது அது வெற்றியளிக்கும் என்பதை நிரூபித்துள்ளது.
விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு ஆணையின் கீழ் ஒரு செயலகத்தை உருவாக்கி தேசிய கொள்கையை உருவாக்கவும், விலங்குகளால் பயிர்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கான வரைபடத்தை உருவாக்க வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பொய்யான தகவல்கள் மனித மிருக மோதலை மோசமாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்த நாட்டிற்கு ஒரு தேசியக் கொள்கை தேவை. அதை உருவாக்கவே நாங்கள் அரசாங்கத்தைத் தெரிவு செய்தோம். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்தக் கொள்கை உள்ளது. நமது கலாச்சாரத்தின்படி, நாங்கள் விலங்குகளைச் சுடுவதில்லை ஆனால் அமைச்சர் அதனை பரிந்துரைத்தார். சுற்றுலா பயணிகள் கட்டிடங்களை பார்வையிட வருவதில்லை; அவர்கள் யானைகளைப் பார்வையிடவும், நம் நாட்டின் இயற்கை அழகை ரசிக்கவும் வருகிறார்கள்,"
2007 ஆம் ஆண்டு நாய்க்கடிக்குள்ளாகி 63 பேர் யிரிழந்தனர். ஆனால் 2024 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 11 ஆக குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM