குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக முச்சக்கரவண்டியில் சென்ற இருவர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் கைது

08 Jan, 2025 | 11:49 AM
image

குற்றச்செயல் ஒன்றில் ஈடுபடுவதற்காக முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

ஹங்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் ஹங்வெல்ல பிரதேசத்தில் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியில் இருந்த இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 35 மற்றும் 49 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் நபரொருவரை சுட்டுக் கொலை செய்வதற்காகத் தயாராக இருந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12