Lasantha Will Never Be Forgotten
16 வருடங்களிற்கு முன்னர் இதுபோன்றதொரு நாளில் ,எனது சகோதரர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.
ஆம் 16 வருடங்களிற்கு முன்னர் லசந்தவின் பிள்ளைகள் அவர்கள் இளையவர்களாகயிருந்த போதே தங்கள் தந்தையை இழந்தனர்.நாங்கள் சகோதரர் ஒருவரை இழந்தோம் எனது தந்தையும் தாயும் தங்கள் இளைய புதல்வனை புதைக்கவேண்டிய நிலையேற்பட்டது, இது எவ்வளவு ஈவிரக்கமற்ற விடயம்.
விலங்குகள் ஏனைய விலங்குகளை படுகொலை செய்வதில்லை,பயங்கரமான கோழைத்தனம் மிக்க மனிதர்களே தங்கள் சக மனிதர்களிற்கு இதனை செய்வார்கள்.
அனேகமான தருணங்களில் தங்களிற்குகாக கொலைகளை செய்வதற்கு ஏனையவர்களை அவர்கள் ஈடுபடுத்துவார்கள்,இதன் காரணமாகவே இது மிகுந்த கோழைத்தனம் மிக்க விடயம்.
சில விசாரணையாளர்களிற்கு கொலைகாரர்கள் யார் என்பது தெரிந்துள்ள போதிலும் கொலைகாரர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.
கொலைகாரர்கள் கொலைகளில் ஈடுபட்டமைக்கான தடயங்கள் ஆதாரங்களை மறைப்பதற்கு இழிவான செயல்களில் ஈடுபட்டவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் கட்டமைப்பில் உயர்நிலைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
வினைப்பயன் ஏற்கனவே சிலருக்கு உரிய பாடத்தை புகட்டியுள்ளது,ஏனையவர்களும் இதனை அனுபவிப்பதற்கு நீண்;டகாலம் எடுக்காது.
இந்த படுகொலையின் பின்னர் இலங்கையை ஆண்ட நான்கு அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டும் விடயத்தில் வேண்டுமென்றே அலட்சியமாகயிருந்தன,கொலையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டவர்கள் உட்பட குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டன அல்லது குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை தவிர்த்தன.
நாங்கள் மீண்டும் மீண்டும் முட்டாள்களாக்கப்பட்டடோம்,
ஆட்சிமாற்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பினோம்.
இது அர்த்தமற்றது.
லசந்தவின் அரசியல் நண்பர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் அதிகாரத்திலிருந்தவேளை எதனையும் செய்யவில்லை.அது ஊழல் மிகுந்த அமைப்பு முறை.
அரசியல் வேலியின் இரு பக்கங்களிலும் இருந்தவர்கள் ,ஒரு விளையாட்டை விளையாடினார்கள்.'இது உங்களது தருணம் பின்னர் எங்களுடையது," என்பதே அமைப்பு முறை.
அக்கறையின்மை உள் நுழைந்தது,தண்டனையின்றி கொலை இடம்பெற்றது.
தாங்கள் பாதிக்கப்படாத வரை மக்கள் கவலைப்படுவதில்லை.ஆனால் எந்த சமூகமும் அவ்வாறன சூழ்நிலையில் நீண்டகாலம் நீடிக்க முடியாது, அவ்வாறான நிலையிலேயே அரகலய இடம்பெற்றது.
லசந்தவின் கொலைக்கும் மிக்விமான கொள்வனவிற்கும் இடையில் தொடர்புள்ளது என்பது நன்கு தெரிந்த விடயம்.
அப்போதைய பாதுகாப்பு செயலாளர் லசந்தவும் சண்டே லீடரும் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டதாக மவுண்டலவேனியா நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்.பாதுகாப்பு செயலாளர் மிக்விமான கொள்வனவு அரசாங்கங்களிற்கு இடையில் இடம்பெற்றது என தெரிவித்திருந்தார்.
ஆனால் இது உண்மையல்ல என்பது தற்போது எங்களிற்கு தெரியும்.
இலங்கை மேற்கொண்ட வெளிநாட்டு கொள்வனவுகளில் இதுவே ஊழல் அற்றது சுத்தமானது எனவும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார்.
நான் மேலும் சொல்லவேண்டுமா? தீர்ப்பு வெளியானது - அது நீதிமன்ற அவமதிப்பு
அது எப்படியிருந்தாலும், லசந்தவின் இழப்பு எங்கள் குடும்பத்தில் இன்னமும் புதியதாய் நினைவுகளில் இருந்து மறையாததாய் நீடிக்கின்றது.
மூன்று சகோதரிகள் இரண்டு சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் இளையவர் அவர்.16 வருடங்கள் கடந்து விட்டன, ஆனால் இன்னமும் எங்கள் இளைய சகோதரரின் இழப்பினால் நாங்கள் துயரடைகின்றோம்..
எனது பெற்றோரை அழைத்து என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை வேண்டிய தருணமே அன்று நான் சந்தித்த மிகவும் கடினமான தருணம்.
லசந்தவின் படுகொலையாளிகளும் அதற்கான உத்தரவை வழங்கியவர்களும் இன்னமும் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஒரேயொரு காரணம் அரசியல் உறுதிப்பாடு இன்மையே.
புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிடம் அதற்கான அரசியல் உறுதிப்பாடு உள்ளதாக எங்கள் குடும்பம் புதிய நம்பிக்கையுடன் உள்ளது..
சிஐடியின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொண்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி தன்னிடம் இதற்கான அரசியல் உறுதிப்பாடு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.
நாங்கள் நீதிக்காக காத்திருக்கின்றோம் - வினைப்பயனை நாங்கள் எதிர்பார்க்காமல் இருக்கலாம் என்றாலும் இரண்டில் ஒன்று நடக்கும் என சாத்தியமாகும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
ஜனாதிபதி அவர்களே எங்கள் குடும்பம் நீதியை எதிர்பாக்கின்றது - இந்த விடயத்திற்கு முடிவு வேண்டும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM